* மத்திய கல்வித்துறை சார்பாக கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள உயர்கல்வி ஆணைய மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதோடு கல்வி துறையில் மாநிலங்களுக்கு முழுமையான சுயாட்சி உரிமை வழங்கிட வகை செய்யும் முறையில் கல்வி அரசியல் அமைப்பு சட்டத்தில் கல்வியை பொது பட்டியலில் இருந்து நீக்கி மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்.
* இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பவும், அவர்களது நல்வாழ்வுக்கான உதவிகள் இலங்கை அரசினால் வழங்கப்படவும், மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். ஏற்கனவே உறுதி அளித்தபடி இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது ஒன்றுதான் நிரந்தர வாழ்வுக்கு வழி வகுக்கும் என்பதால், அதற்கான அரசியல் தீர்வு காண்பதற்கு தேவையான முயற்சிகள் அனைத்தையும் மத்திய அரசு விரைவில் மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும்.
* இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை ஏவிவிடும் வன்முறை கொடுமைகளுக்கு நிரந்தரமான முடிவினை ஏற்படுத்திடும் வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
* தமிழகத்தில் தொழில் வர்த்தகம் பெருகிடவும், நாட்டின் அந்நிய செலாவணி வருவாய் அதிகரித்திடவும், மீனவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரம் உயரவும், தென் மாவட்டங்கள் பெருமளவிற்கு வளர்ச்சி பெறவும் வழிவகுக்கும் சேதுசமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை பொதுக்குழு வலியுறுத்துகிறது.
* திருமணங்களை பதிவு செய்யும் சட்டத்தில் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் ஆவன செய்ய வேண்டும்.
* மாநிலத்தில் உள்ள பல்வேறு இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தி.மு.க. அரசை பாராட்டுவதுடன், மேலும் பலருக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கான முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும்.
* இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியை ஆக்க வேண்டும் என்று மத்திய அரசை பொதுக்குழு வலியுறுத்துகிறது. தமிழ் மொழியை உயர் நீதிமன்ற மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மாநிலத்தில் சுயாட்சியும், மத்தியில் கூட்டாச்சியும் ஆக்கப்பூர்வமாக உருவாகி கூட்டாச்சி அமைப்பு வலுப்பெற இந்திய அரசமைப்பு சட்டத்தில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
* 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் சட்டதிட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
* கரும்பு விவசாயிகள் மத்தியில் பொறுப்பற்ற முறையில் தவறான தகவல்களை அளித்து அவர்களை திசைதிருப்பும் ஜெயலலிதாவின் பொய் பிரச்சாரத்தை வன்மையாக கண்டிக்கிறோம் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.