Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழத் தமிழர் : கருணாநிதிக்கு மீண்டும் மனநிறைவைத் தரும் மன்மோகன்

இலங்கை தமிழர்கள் குறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட கருத்து மனநிறைவை ஏற்படுத்துவதாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்த போது, இலங்கையில் தமிழ் மக்கள் சுயகௌரவுத்துடனும், சம உரிமைகளுடனும் வாழ வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருப்பதாக மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார்.

இந்த நிலைப்பாட்டையே டெசோ மாநாட்டின் தீர்மானமும் உள்ளடக்கி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

2009ஆம் ஆண்டின் ஆரம்பத்தில்  மன்மோகன் கருணாநிதிக்கு மனநிறைவைக் கொடுத்தபோது ஈழத்தில் ஒரு லட்சம மனித உயிர்கள் பலியாகின. இப்போது ஜெயலலிதாவும்  கருணாநிதியும் இணைந்து ‘ஈழத் தமிழரை’ காக்க புறப்பட்டுவிட்டனர்.

Exit mobile version