தமிழகத்தின் தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க மத்திய அரசு தவறி விட்டது.வருகிற புதன்கிழமை நடைபெறும் மாநிலங்களவை கூட்டத்தில் இந்திய மீனவர்கள் பாதுகாப்பு குறித்து கடுமையாக பேசப்படும். அதுபோல இலங்கை தமிழர் பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாகும். இதை உள்நாட்டு பிரச்சினையாக மட்டும் பார்க்க கூடாது.தமிழகத்தில் 80 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அகதிகளாக வந்ததற்கு காரணம் இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெற்ற போராட்டத்திற்கு இந்திய அரசு ராணுவத்தை தார்மீக ரீதியாக வழங்கி உள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இதை ஒப்பு கொண்டுள்ளார். இந்திய அரசு என்பது காங்கிரஸ் கட்சி மட்டும் அல்ல. தி.மு.க.வும் கூட்டணியில் உள்ளது. இலங்கை போரில் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது. இதை ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் பாங்கி மூன் கூட அறிவித்து உள்ளார். ஈழத் தமிழர்களை மத்திய அரசு கைகழுவி விட்டது. இதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டிக்கிறது.
