இந்த நிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ டெல்லி சென்றார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது பா.ஜனதாவுடன் ம.தி.மு.க. கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்தாக கூறப்படுகிறது.
மதவெறிக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியை ஈழத் தமிழர்களின் பெயரால் ஆதரிப்பதற்கு வை.கோபாலசாமி போன்ற அரசியல் பிழைப்புவாதிகளுக்கு எந்த உரிமைகளும் கிடையாது. பெருந்திரளான மக்களின் உயிரோடும் உரிமையோடும் அரசியல் நாடகம் நடத்தும் இவர்கள் நரேந்திரமோடி மற்றும் ராஜபக்ச போன்ற ஈவிரக்கமற்ற இனக்கொலையாளிகளின் நண்பர்கள் என்பது அவமானகரமானது.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எழும் உலக மக்களின் பொதுப்புத்தியின் அழிக்கும் நோக்கில் செயற்படும் இவர்கள் அடிப்படையில் ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கிறார்கள்.
தமிழ் நாட்டிலுள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகள் வைகோ, ராமதாஸ் போன்ற இனக்கொலை ஆதரவாளர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவது காலத்தின் தேவையாகும். புலம் பெயர் நாடுகளில் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவதாகக் கூறும் அமைப்புக்கள் வை.கோ போன்ற ராஜபக்ச சார்பு அரசியலை முன்னெடுப்பவர்களை எதிர்கொள்வது அவசியமானதாகும்.