Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழத் தமிழருக்காய் கண்ணீர் சிந்தும் லீ

ஈழவிடுதலைப் போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கும், இன்று வரை இலங்கையில் வேதனைகளை அனுபவித்து கொண்டிருக்கும் தமிழ் மக்களும், நீதியைப் பெறும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம் என பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் ( Lee Scott) தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றவாவது பாராளுமன்ற அமர்விற்கு அனுப்பிவைத்த வாழ்த்துச் செய்தியிலேயே லீ ஸ்கொட் ( Lee Scott) இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கணிசமான தமிழ் வாக்குக்களைக் கொண்ட இலண்டன் புற நகர்ப் பகுதியில் பாராளுமன் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள லீ, தனது தொகுதியிலுள்ள மக்களுக்குக் கூட இனப்படுகொலை குறித்துக் கூறுவதில்லை. தமிழ் கூட்டங்களுக்கு அவ்வப்போது சென்றுவரும் லீ இன்று வரை தனது தொகுதியிலிருந்து ஒருவரையாவது அழைத்து வந்ததில்லை. இலங்கையில் ஒரு தேசிய இனத்தின் மீது இனச் சுத்திகரிப்பு நடைபெறுகிறது. தமிழர்கள் நம்பியிருக்கும் பாரளுமன்ற உறுப்பினர்கள் மூச்சுக்கூட விடுவதில்லை.

Exit mobile version