இணைந்த வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் இந்திய அமைச்சர் சிதம்பரத்தின் கருத்துத் தெரிவிக்க, இலங்கையின் உள்நாட்டு விவகாரம் பற்றி பேசுவதற்கு வெளியாட்களுக்கு உரிமை கிடையாது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச் செயலரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் பிபிசியிடம் தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ராஜபக்ஷ 100 சதவீத பொறுப்பு என்றால் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு 50 சதவீத தார்மீக பொறுப்பு உண்டு. மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ப.சிதம்பரத்துக்கும் தார்மீக பொறுப்பு உண்டு என்பதை அவர் உணரவேண்டும் எனப் தமிழக பாரதீய ஜனதா கருத்து வெளியிட்டுள்ளது.
மக்களின் கண்ணீரிலும் அவலங்கள் மீதும் அரசியல் பிழைப்பு நடத்தும் இந்தியாவின் இந்தக் கூட்டங்கள் ஈழப் பிரச்சனையிலிருந்து விலகிச் சென்றாலே மக்கள் தம்மைத் தற்காத்துக்கொள்ளப் பழகிக் கொள்வார்கள்.
இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைச் சிதைத்து அழிப்பதில் ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பித்து இந்தியா வரை பரந்திருக்கும் பிழைப்புவாதக் கும்பல்களின் பங்களிப்புக் கணிசமானது.