இவர் புத்தளத்தில் Community Trust Fund என்பதற்கு காப்பாளராக இருந்து சிறுபான்மை இனத்தினரினதும், பெண்களினது பிரச்சனைகள், உரிமைகள், இனங்களிர்க்கிடையிலான புரிந்துணர்வை வளர்த்தல், புனர்வாழ்வு, இளையோருக்கான வேலைத்திட்டங்கள், வடகிழக்கில் மிதிவெடி அபாயம் சம்பந்தமான அறிவு சார்ந்த விழிப்புணர்வு வகுப்புகளை நடத்துவது மட்டுமல்லாமல், முக்கியமாக தனது புத்தளம் மாவட்டத்தில் தமிழ் பேசும் தமிழ் முஸ்லிம் மக்களிர்க்கிடையிலான புரிந்துணர்வை ஏற்ப்படுத்துவதில் பெரும் பங்காற்றி வருகிறார்.
இவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, இவர் கடந்த 20 வருடங்களாக ஈழத்தில் எமது இனத்திற்கு அழகாக அழைக்கும் சொல்லான, “இடம் பெயர்ந்தவர்” என்ற அடையாளக் குறியுடன் புத்தளத்தில் வாழ்வது மட்டுமல்லாமல் தமது சொந்த மண்ணை, வாழ்விடங்களை விட்டு தம் சொந்தத நாட்டினுள்ளே தன்னைப்போல் அகதியாக “இடம் பெயர்ந்தவர்கள்” என்ற குறியுடன் வாழும் சக தமிழ் முஸ்லிம் சகோதரர்களுக்கு ஆரோக்கியமான முறையில் வாழ்க்கை முறை, சுகாதாரம், பெண்களின் விழிப்புணர்ச்சி முதலியவற்றை எடுத்துரைத்து சேவையாற்றி வருவதுடன், பொதுவாக, முக்கியமாக அவர் சார்ந்த சிறுபான்மை இனமான முஸ்லிம் இடம்பெயர்ந்தவர்களின், குறிப்பாக பெண்களின் பிரச்சனைகள், தேவைகள் இனம்கண்டு, நாட்டு அரசியல் சூழ்நிலைகளுக்குமிடையில் சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இவருக்கு கிடைத்திருக்கும் International Women of Courage award உலகத்திலுள்ள சமூகங்களிக்கிடையிலான பெண்களின் போராட்டங்கள், மனித உரிமை, சமூக நீதிக்கா போராடுபவர்களுகாக மார்ச் 2007ம் ஆண்டு அமெரிக்க அரசாங்கத்தால் தொடக்கி வைக்கப்பட்டது.
மேலும் இவருக்கு கிடைத்திருக்கும் இவ்விருது உலகத்தில் ஆண்டுதோறும் தெரிவு செய்யப்படும் பத்துப் பேரில் ஒருவருக்காக இவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விருது பெரும் மற்றயவர்களின் விபரங்கள்:
Shukria Asil (Afghanistan), Col. Shafiqa Quraishi (Afghanistan), Androula Henriques (Cyprus), Sonia Pierre (Dominican Republic), Shadi Sadr (Iran), Ann Njogu (Kenya), Dr. Lee Ae-ran (Republic of Korea), Sister Marie Claude Naddaf (Syria), and Jestina Mukoko (Zimbabwe).
தகவல்:
அலெக்ஸ் இரவி
இலங்கை அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைக்கு:
http://usembassycolombo.blogspot.com/2010/03/sri-lankan-recognized-as-international.html