விழாவில், தமிழர் தலைவர் எனும் இணையத்தளத்தை தொடங்கி வைத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசும்போது,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 80வது பிறந்தநாள் விழாவில் பேசுகையில், இளமை காலத்தில் நானும், வீரமணியும் பெரியாரின் கொள்கைகளை பரப்ப தமிழகம் முழுவதும் பகல் இரவு பார்க்காமல் நடந்தே சுற்றுப்பயணம் மேற்கொண்டது இப்போது நினைவுக்கு வருகிறது. திராவிட கழகத்தில் சின்னஞ்சிறு பிள்ளையாக வீரமணி இணைந்த போது, ஒரு திருஞானசம்பந்தர் கிடைத்திருக்கிறார் என்று அண்ணா அறிவித்தார். பெரியாருக்கு பின்னர் அவரது சொத்துகளையும், கொள்கைகளையும் வீரமணி சிறப்பாக பாதுகாத்து வருகிறார். இந்த செயலை என்னால் கூட செய்ய முடியாது. அவரது வளர்ச்சியை நான் ஆச்சரியமாக பார்க்கிறேன் என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடும்போது,
பிரபாகரன் ஆயுதம் ஏந்தி போராடிய போதே ஈழத்தமிழகம் அமைந்திருக்க வேண்டும். ஆனால் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் தான் ஈழத்தமிழகம் கிடைக்கவில்லை. எனவே ஈழத்தமிழகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நானும், வீரமணி, திருமாவளவன் உள்ளிட்டோர் கொண்ட டெசோ அமைப்பு முயற்சித்து வருகிறது. அந்த முயற்சி வெற்றி பெற தமிழர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்று கருணாநிதி கூறினார்.
பிழைப்பு வாதிகளும் காட்டிக்கொடுப்பாளர்களுமே எந்த விமர்சனமும் அற்ற ஒற்றுமை குறித்துப் பேசுகின்றனர்.
அடக்குவோரும் அடக்கப்படுவோரும் ஓருகுடையின் கீழ் இணைய முடியாது என்ற உண்மையை, பிழைப்பு வாதிகளும் அழிக்கப்படும் மக்களும் ஒற்றுமையாக முடியாது என்ற அடிப்படையை மக்களிடம் மறைப்பது கருணாநிதி மட்டுமல்ல இன்னும் புலி சார்ந்து செயற்படும் பல பிழைப்பு வாதிகளும் தான்.