ஈரான் 10 அடி நீளமான ரொக்கெட்டை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பியது. இதில் ஒரு எலியும், 2 ஆமைகளும் அனுப்பப்பட்டன. x கவோஷ்கர்-3 என்ற இந்த ரொக்கெட் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதையோ, எப்போது அனுப்பப்பட்டது என்பதையோ ஈரான் வெளியிடவில்லை.
விண்வெளிக்கு ரொக்கெட் அனுப்பியதன் மூலம், தொழில்நுட்ப போட்டியில் ஈரான் மேற்கத்திய நாடுகளைத் தோற்கடிக்க முடியும் என்பதையே காட்டுகிறது என்று அகமதினிஜாத் தெரிவித்தார். இதை விட பெரிய சாதனைகளை எதிர்காலத்தில் ஈரான் சாதிக்கும் என்றும் அவர் கூறினார்.
ஓராண்டுக்கு முன்புதான் ஈரான் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தகவல் தொழில் நுட்ப செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.