கடாபி அரசை பல பொய்யான குற்றச் சாட்டுக்களை முன்வைத்து பெரும் அழிவின் மத்தியில் லிபியாவைக் கைப்பற்றிய அமரிக்க அணி, இப்போது ஈரானைக் குறி வைக்கின்றன. ஈரானில் அணு ஆயுதம் தயாரிக்கப்படுவதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அதனால் ஈரான் மீது பொருளாதரத் தடை மேற்கொள்ள வேண்டும் என்றும், தேவை ஏற்பட்டால் தாக்குதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படலாம் என பிரன்சும் பிரித்தானியாவும் தெரிவித்துள்ளன. ஈரான் மீதான தாக்குதலை மேற்குலக ஊடகங்கள் ஆரம்பித்துவிட்டன. மூன்றாமுலக நாடுகளின் வியாபார ஊடகங்கள் மேற்கின் பொய்களைப் பிரதியெடுத்துப் பிரசுரிக்க ஆரம்பித்து விட்டன.
தேர்தல் ஜனநாயக முறைப்படி தெரிந்தெடுக்கப்பட்ட ஈரானிய அரசின் மீதான யுத்தத்திற்கான அத்தனை தயாரிப்புக்களையும் மேற்குலகம் மேற்கொண்டு வருகிறது.