Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈரான் பிரித்தனியத் தூதரகம் சேதம் : பிரித்தானியா மிரட்டல்

பிரித்தானிய அரசு ஈரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையை எதிர்த்து தெஹ்ரானில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பிரித்தானிய தூத்ரகம் சிறிய அளவிலான சேதத்திற்கு உள்ளானது. தெஹ்ரான் பல்கலைக் கழக மாணவர்கள் ஏற்பாடுசெய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் பிரித்தானிய தூதரக வளாகத்துள் நுளைந்து கட்டடத்தின் யன்னல்களைச் சேதப்படுத்தினர். பிரித்தானியக் கொடியையும் எரித்துள்ளனர். மாணவர்களின் இந்த நடவடிக்கைகாக ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சகம் உடனடியாகவே மன்னிப்புக் கோரியிருந்தது. பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலர் வில்லியம் ஹக் ஈரான் விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும் என மிரட்டல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஈரானியப் பொலீஸ் சம்பவத்தை அடுத்து பிரித்தானிய தூதரகத்திற்கு விரைந்து அங்கு கண்ணீர்ப் புகைப் பிரயோகம் நடத்தி ஆர்ப்பாட்டக் காரகளை வெளியேற்றியது.
லிபியாவில் தாக்குதல் நடத்தி முடிந்த பின்னர் மேற்கு நாடுகள் அவற்றின் ஊடகங்களின் துணையோடு ஈரானிற்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.
பொருளாதாரத் தடையை ரஷ்யா ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. அதே வேளை ஈரான் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்டால் உலகப் போர் மூளும் அபாயம் காணப்படுவதாக சில ஊடகங்கள் ஆய்வறைக்கைகள் வெளியிட்டுள்ளன.

Exit mobile version