ஈரானின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது நாசகாரி கப்பலின் வெள்ளோட்ட வைபவத்தில் உரையாற்றிய அவர், சில மேற்குலக அதிகாரிகள் காலாவதியான, அர்த்தமற்ற கருத்தை திரும்பத்திரும்பக் கூறிவருவதாகவும் குறை கூறினார்.
ஈரானின் தற்போதைய மற்றும் கடந்தகால நடவடிக்கைகள் அணு ஆயுதத்தைத் தயாரிப்பதுடன் தொடர்புபட்டவை என்று சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் முதல் தடவையாகக் கூறிய மறு தினம் அவரது இந்த அறிக்கை வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..