
ஈரானை இஸ்ரேல் தாக்கினால் உலகம் முழுவதும் போர் ஏற்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோல சர்கோசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களின் மீது கொண்டுள்ள ஆசையின் காரணமாக போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலிய அரசியல்வாதிகள் அச்சுறுத்தியபடி ஈரான் மீது இஸ்ரேல் போருக்குத் தயாராகி வருகிறது.
இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னை எதுவும் தீரப்போவதில்லை. மாறாக உலகம் முழுக்க, குறிப்பாக மத்தியக் கிழக்கு நாடுகளில் போரும் குழப்பமும் உருவாகும் என்றார்.
மத்திய கிழக்கை ஆக்கிரமித்த பல்தேசியநிறுவனங்கள் மக்களின் எதிர்ப்புக் காரணமாகப் போதிய வழங்களைக் கொள்ளையிட முடியாத நிலையிலும் ஈரானின் மக்கள் மற்றும் இராணுவ பலமுமே நேட்டோவின் பின்வாங்கலுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.