Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈரானுக்கு எதிராக ஜப்பான் பொருளாதாரத் தடை.

அத்து மீறி ஈராக்கிற்குள் நுழைந்த அமெரிக்கப் படைகள் ஈராக் அதிபர் சதாமை அக்கிரமமான முறையில் தூக்கிலிட்டு அந்த நாட்டையே சீரழிந்த்து தனது பொம்மை அரசை நிறுவி அந்த நாட்டை பாழாக்கிய பின் போர் முடிவடைந்து விட்டது என்று அறிவித்திருக்கிறது அமெரிக்கா.அடுத்து ஈரானையும், ஆப்கான் நாட்டையும் குறிவைத்து அதில் ஆப்கானை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஈரானுக்கு நெருக்கடிகளை தோற்று விற்று வருகிறது.இந்நிலையில் ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடையை ஜப்பான் விதித்துள்ளது. ஈரான் நாட்டில் முதலீடு செய்தல், பணபரிவர்த்தனை போன்ற அனைத்துக்கும் தடை விதிக்க ஜப்பான் முடிவு செய்துள்ளது. ஈரானில் புதிதாக எண்ணெய் மற்றும் கேஸ் துறையில் முதலீடு செய்வதையும் ஜப்பான் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. ஆனால் அரபு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில் எந்தக் கட்டுப்பாட்டையும் ஜப்பான் விதிக்கவில்லை. ஈரான் மீதான பொருளாதாரத் தடைக்கு ஜப்பான் அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. ஈரான் மீது பொருளாதாரத் தடையை விதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானம் கொண்டு வந்ததைத் தொடர்ந்து இப்போது ஜப்பான் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.

Exit mobile version