Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈரானுக்கு எதிராக அமெரிக்க அழுத்தம் அணு ஆயு தப் போரை உருவாக்கக் கூடும் – பிடல் காஸ்ட்ரோ.

வயது முதிர்ந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஓய்வில் இருந்த க்யூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ நான்காண்டுகளுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். சுமார் 12 நிமிடங்கள் உரையாற்றிய அவர் உலக நிலைகள் தொடர்பாக பல் வேறு எச்சரிக்கைகளை வெளியிட்டார். “அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையை நடைமுறைப் படுத்தும் முயற்சிகளை ஈரான் எதிர்த்தால், அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயம் உள்ளது. அவ் வாறு நடைபெறவிடாமல் ஒபாமாவை உலகத் தலை வர்கள் வற்புறுத்த வேண்டு மென்று அவர் தம் உரையில் குறிப்பிட்டார். சீனாவும், சோவியத்தும் (ரஷ்யாவும்) அணு ஆயுதப் போரை விரும்பவில்லை என்பதால் அதனை அவை தவிர்க்க விரும்பும் என்றும் அவர் கூறினார்.அமெரிக்க சிறையில் மருத்துவ உதவியின்றி சிர மப்படும் கியூப நாட்டவர் ஜெரார்டோ ஹெர்னாண் டஸ் பற்றியும் அவர் உரை யில் கூறினார். ஹெர்னாண் டஸின் மனைவி அவரைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் அல்லது அவரை விடு தலை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.அவருடைய உரையை ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ அருகிலிருந்து கேட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் களை தனித்தனியே சந்தித் தப்பின் அவர் களைப்ப டைந்தார். அதையடுத்து அவைத் தலைவர் ரிக் கார்டோ அலர்கான் ஒன் றரை மணி நேரக் கூட்டத் துக்குப் பின் அவையை முடித்துவைத்தார். பலத்த கைதட்டலுடன் அவை முடிவுக்கு வந்தது.

Exit mobile version