Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈக்குவாடோர் தூதரகத்தை விட்டு வெளியேறப்போகிறேன் : அசாஞ்ச்

Julian Assangeஅமெரிக்க அரசின் பயங்கரவாத மற்றும் சமூகவிரோத நடவடிக்கைகளை விக்கிலீக்ஸ் என்ற தகவல் கசிவின் ஊடாக வெளிக்கொண்டுவந்த ஜூலியன் அசாஞ்ச் இரண்டு வருடங்களின் முன்னர் ஈகுவாடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். ஈக்குவாடோர் அசாஞ்சிற்கு அரசியல் தஞ்சம் வழங்கிற்று. சுவீடனில் அசாஞ்ச் தங்கியிருந்த காலத்தில் அங்கு சட்டத்திற்குப் புறம்பான பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமெரிக்கா பொய்க்குற்றம் சுமத்திக் கைது செய்வதற்கு முனைந்தால் அசாஞ்ஸ் ஈகுவாடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரினார். ஸ்கை நியூஸ் மற்றும் மடொக் என்பவரால் நடத்தப்படும் ஊடகங்கள் அசாஞ்சிற்கு உடல் நலமின்மையால் போலிசாரிடம் தன்னை ஒப்படைக்கப்போவதாகக் கூறுவது தவறானது என உடகவியலாளர் சந்திப்பில் அசாஞ்ச் மறுப்புத்தெரிவித்தார். தான் தூதரகத்தை விட்டு வெளியேறப்போவதாக வந்த தகவல் உண்மையானது எனவும் விரைவில் வெளியேறப்போவதாகவும் தெரிவித்தார். இந்த நூற்றாண்டில் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்காமல் தன்னைச் சமூகத்திற்காக அர்பணித்த போராளிகளில் அசாஞ் பிரதானமானவர்.

அதேவேளை பிரித்தானிய அரசு அசாஞ்சின் மனித உரிமையை வன்முறைக்கு உள்ளாகியுள்ளது என ஈகுவடோர்  வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

லண்டனில் ஈகுவடோர் நாட்டுத் தூதரகத்தின் முன்பாக அசாஞ்சைக் கைதுசெய்யும் நோக்கில்  24 மணி நேரமும் போலிஸ் காவல்காத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version