யுத்தப் பிரபுக்களில் ஒருவரான தொழிற்கட்சியின் முன்னை நாள் தலைவர் ரொனி பிளேர் 2003 ஆம் ஆண்டு ஈராக் நாட்டை ஆக்கிரமித்த யுத்தத்தின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவர். இஸ்லாம் மதம் அடிப்படையிலேயே தீவிரத் தன்மை கொண்டது, இது எமது எதிர்காலப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று அந்த நேர்காணலில் பிளேர் தெரிவித்தார். சிரிய அரசிற்கு எதிராக யுத்தம் நடத்துவதற்காகவென மில்லியன்கள் மில்லியன்களாக உழைக்கும் மக்களின் வரிப்பணத்தைக் கொட்டிக் கொடுத்த நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்றாகும். இஸ்லாமியப் பயங்கரவாதிகளை உருவாக்கி வளர்ப்பதே ரொனி பிளேர் போன்ற யுத்தப் பிரபுக்கள் தான்.
மேற்கு ஏகாதிபத்திய அரசுகளால் திட்டமிட்டு பலிகடாக்கள் போன்று வளர்க்கப்படும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தமது நாடுகள் ஆக்கிரமிக்கப்படுவதற்குத் துணை போகின்றனர்.
சிரியாவை ஆக்கிரமிக்கத் தவறினால் ஈரானின் ஆதிக்கம் அதிகரிக்கும் அது பிராந்தியதிற்கே ஆபத்தானது என பிளேர் தனது நேர்காணலின் போது கூறினார். சிரிய அரசு இரயான ஆயுதங்களை வைத்திருப்பதாலேயே ஆக்கிரமிக்கிறோம் எனக் கூறும் மேற்கின் யுத்த வெறிபிடித்த ரொனி பிளேரும் அரசுகளும் மறுகணத்திலேயே தமது நோக்கம் வேறானது எனக் கூற ஆரம்பித்துவிடுகின்றனர்.