’30 நாடுகளைச் சேர்ந்த பௌத்த மதத் தலைவர்கள் மற்றும் 600க்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றிய இம்மாநாட்டில் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி பலரின் கவனத்தை ஈர்த்ததோடு பாராட்டையும் பெற்றது. உலக சமாதானம், சகவாழ்வு ஆகியவற்றை மேலும் பலமூட்டி செயற்படும் நோக்கில் இம்மாநாடு மூன்று நாட்களாக சீனாவில் பஓஜி நகரில் பாமன் விகாரையில் நடைபெற்றது.’என ஈ.பி.டி.பி மகிந்தவைப் பாராட்டி இணையச் செய்தியை வெளியிட்டுள்ளது.
புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் உரிமைக்காகப் போராடுவதாக மக்களை ஏமாற்றிவந்த டக்ளஸ் தேவாந்தா இன்று இஸ்லாமியர்களுக்கு எதிரான மகிந்த அரசின் சிங்கள பௌத்த பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்.
பௌத்ததைப் பயங்கரவாதமாக்கிய மகிந்தவைப் புனிதப்படுத்தும் அரச துணைக்குழுவான ஈ.பி.டி.பி என்ற தமிழ்ப் பயங்கரவாத அமைப்பு இஸ்லாமியத் தமிழர்களையும் காட்டிக்கொடுக்கிறது.