மேலும் 100 பேர் அதில் காயமடைந்தனர். குண்டு ஒரு பழக் கூடையில் மறைத்து வைக்கப்படிருந்திருக்கிறது.அரசாங்கத்துடன் தற்போது மோதல் நிறுத்தத்தில் இருக்கும் பாகிஸ்தானிய தலிபான்கள், தமக்கும் இந்தத் தாக்குதலுக்கும் தொடர்பு கிடையாது என்றும், பொதுமக்களை இலக்கு வைத்துத் தாக்குவது இஸ்லாமிய சட்டங்களுக்கு முரணானவை என்றும் கூறியுள்ளனர்.
இதேவேளை இக்குண்டுவெடிப்பிற்கு சுய நிர்ணய உரிமை கோரிப் போராடிவரும் பலோசிஸ்தான் விடுதலை அமைப்பு ஒன்று உரிமை கோரியுள்ளது. ஐக்கிய பலோஸ் இராணுவம் என்ற அமைப்பு தாமே குண்டுவெடிப்பை நடத்தியதாக உரிமை கோரியுள்ளது. பாகிஸ்தானிய அரசு பலோசிஸ்தான் மக்கள் மீது இராணுவ ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகிறது. அங்கு தங்க பல பில்லியன் பெறுமதியான தங்க வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் அமெரிக்க மற்றும் மேற்கு ஏகாதிபத்தியங்கள் தலையிட ஆரம்பித்தன. 2012 ஆம் ஆண்டு சுய நிர்ணைய உரிமைக்கு ஆதரவாக அமெரிக்க செனட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்களின் நியாயமான சுயநிர்ணைய உரிமைப் போராட்டங்கள் ஏகாதிபத்தியங்களின் தலையீட்டினால் சிதைக்கப்பட்டு அவர்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இவை இறுதியில் பெரும் மக்கள் அழிவில் நிறைவடைகின்றன.
கடந்த 6 வருடங்களில் இஸ்லாமாபாத்தில் நடந்த மிகவும் கோரமான தாக்குதல் இதுவாகும்.
இஸ்லாமாபாத் போலிஸ் அதிகாரி தஹ்சீப் ஹூசைன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் இக் குண்டுவெடிப்பு பல மைல் சுற்றுவட்டத்திற்குக் கேட்டதாகக் கூறினார்.