நாற்பது வீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் நாளாந்த வாழிவின் வாழ்வாதரத் தேவைகளுக்கே அல்லல்படும் நிலையில் உள்ளனர். இவர்களின் நாள் வருமானம் 1.25 டாலருக்குக் குறைவானது. தனது மக்கள் தொகையின் அரைவாசி அளவில் உலகின் மிகவும் வறுமையுற்றவர்களாக இந்திய அரசின் சுரண்டல் அமைப்பு முறை பேணிவருகிறது. வறுமையும் அழிவுகளும் பல்தேசிய சுரண்டலும் மிக நீண்ட காலமான மாறாமல் பேணப்படும் இந்தியாவில் பிரான்ஸ், ஜப்பான் நாடுகளின் செயற்கைகோள்களை சுமந்துசெல்லிம் இந்த ராக்கட்களை ஏவுவது சாதனையல்ல.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி 21 ராக்கெட் நாளை காலை 9.51 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.