Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இஸ்ரேல் குண்டுவீசி 400 அப்பாவிகள் 4நாளில் பலி : ஹமாஸைக் குற்றம் சாட்டும் புஷ்

இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகளை ஹமாஸ் அமைப்பினர் வீசியது பயங்கரவாதச் செயல் எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இதுவே காஸா மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலுக்கும் காரணம் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க மக்களிடம் வானொலியில் நேற்று உரையாற்றிய போது இதனை தெரிவித்த புஷ், கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கு நாடுகளின் நிலையை கவனமாக ஆராய்ந்து வருவதாகவும், ஏராளமான துப்பாக்கிகள், ராக்கெட் குண்டுகளை ஹமாஸ் அமைப்பு இறக்குமதி செய்துள்ளதாகவும் கூறினார்.

ஹமாஸ்-இஸ்ரேல் இடையே எகிப்து ஏற்படுத்திய போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஹமாஸ், அப்பாவி இஸ்ரேல் மக்களை ராக்கெட் குண்டுகள் வீசி கொன்று குவித்ததாகவும், இத்தாக்குதலை பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததையும் புஷ் தனது உரையில் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே காஸாவில் உள்ள ஹமாஸ் நிலைகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாகவும் புஷ் அப்போது கூறினார்.

Exit mobile version