Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இஸ்ரேல் கொடூரத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று ஐ.நா. பொதுச்சபை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

18.01.2009.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூரத் தாக்குதலை ஐ.நா. பொதுச்சபை வன் மையாகக் கண்டித்துள் ளது. அப்பாவி பாலஸ்தீன மக்களின் உயிரைக் குடிக் கும் இக்கொடிய தாக்கு தலை இஸ்ரேல் உடனடி யாக நிறுத்த வேண்டுமென் றும் ஐ.நா. பொதுச்சபை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

காசா பகுதியில் கடந்த டிசம்பர் 27-ம்தேதி முதல் இஸ்ரேல் முன்னெப்போ தும் இல்லாத அளவிற்கு வான்வழி, கடல்வழி மற் றும் தரைவழியாக சுற்றி வளைத்து தாக்கி வருகிறது. இஸ்ரேலிய போர் விமானங் கள் கொத்து கொத்தாக வீசும் குண்டுகளுக்கு இது வரை 1,140 பேர் இரையாகி யுள்ளனர் என அதிகாரப் பூர்வமாக தகவல்கள் தெரி விக்கின்றன. இவர்களில் சுமார் 400 பேர் குழந்தைகள் என்பது உலகையே அதிர்ச் சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கா னோர் ஏதுமறியாத அப் பாவி பெண்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. 5 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் காய மடைந்துள்ளனர்.

உலக நாடுகள் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்தும் கூட, தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் மறுத்து வருகிறது. இந்நிலையில், இப்பிரச்சனை குறித்து விவாதிக்க ஐ.நா. பொதுச் சபையின் இரண்டு நாள் அவசரக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் காசாவில் உடனடியாக, முழுமையாக மதித்து செயல் படக்கூடிய விதத்தில் சண்டை நிறுத்தம் அமலாக் கப்பட வேண்டும் என்று இஸ்ரேலை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

அணிசேரா இயக்கத் தின் 118 உறுப்பு நாடுகளின் வேண்டுகோள் படி நடத் தப்பட்ட இந்த சிறப்புக் கூட்டத்தில் 70-க்கும் மேற் பட்ட நாடுகளின் தூதர்கள் பேசினர். கூட்டத்தின் முடி வில் 15 உறுப்பு நாடுகள் கொண்ட ஐ.நா. பாது காப்புக் கவுன்சில் உட்பட மொத்தம் 192 உறுப்பு நாடு களைக் கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் இஸ்ரேல் தவிர அனைத்து நாடுகளும் இத்தீர்மானத்தை ஆதரித் தன. இக்கூட்டத்தை நடத்த விடாமல் சீர்குலைக்க இஸ் ரேல் முயற்சித்தது. எனினும் இந்த முயற்சி முறியடிக்கப் பட்டது.

இஸ்ரேலை வன்மையா கக் கண்டிக்கும் தீர்மா னத்தை நிறைவேற்றிய ஐ.நா. பொதுச்சபையின் இந்த சிறப்புக் கூட்டத்திற்கு தலை மையேற்ற மிக்கேல் டி எஸ்காட்டோ பிராக்மேன் பேசுகையில், ஐ.நா. பொதுச் சபை என்னும் உலக நாடு களின் பிரதிநிதியின் குரலை ஒலிக்கவிடாமல் செய்ய இஸ்ரேல் முயற்சிப்பது கண் டனத்திற்குரியது என்றும், மனிதத்தன்மையற்ற தாக்கு தல் தொடர்வதால் காசா பற்றி எரிகிறது என்றும் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஆயிரத்திற் கும் மேற்பட்ட பாலஸ்தீனர் களில் மூன்றில் ஒரு பகுதி யினர் குழந்தைகள் என குறிப்பிட்ட அவர், இன் னும் குண்டுவீச்சுகளால் இடிந்த கட்டிடங்களுக்கு அடியில் நூற்றுக்கணக் கான அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள், ஐ.நா. சபையைச் சேர்ந்த மனிதநேயப் பணியாளர் களின் உடல்கள் சிக்கிக் கிடக்கின்றன என்று கூறினார்.

இஸ்ரேல் தனது தாக்கு தலை பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் என்று கூறுகிறது. ஆனால், காசா வில் அது நடத்தி வரும் கொடூரத் தாக்குதல் உதவி யற்றவர்கள் மீதான, நிரா யுதபாணிகள் மீதான ஒரு குறுகிய பகுதிக்குள் அடைக் கப்பட்ட பெரும் மக்கள் கூட்டத்தின் மீதான வார்த் தைகளால் கூற முடியாத கொடியத் தாக்குதல் என் றும் அவர் சாடினார்.

ஐ.நா. சபையின் துணை பொதுச்செயலாளர் ஆசா ரோஸ் மிகிரோ பேசும் போது, இஸ்ரேலின் குண்டு வீச்சுகளில் இடிந்த கட்டி டங்களுக்கு அடியில் நூற் றுக்கணக்கான பாலஸ்தீன குடும்பங்கள் புதைந்து போயுள் ளன என்று கூறினார்.

இக்கூட்டத்தில் அடுத்த டுத்து உரையாற்ற வந்த பல் வேறு நாடுகளின் தூதர்கள், இஸ்ரேல் அரசு, அனைத்து விதமான சர்வதேச சட்டங் களையும், மனித உரிமை விதிகளையும் அப்பட்ட மாக மீறுகிறது என்றும், காசாவில் வீடுகள், மருத் துவமனைகள், மசூதிகள், பொது கட்டமைப்பு வச திகள், பள்ளிக்கூடங்கள் என எதையும் விட்டு வைக்க வில்லை என்று சாடினர்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன் சிலின் தலைவராக பொறுப் பேற்றுள்ள பிரான்ஸ் தூதர் ஜீன் மவுரிஸ் ரிப்பர்ட், காசாவிலிருந்து தினந் தோறும் வெளியாகும் தக வல்கள் நமது அதிர்ச்சியை மேலும் மேலும் அதிகரிக் கிறது என்று குறிப்பிட்டார்.

அணிசேரா இயக்க நாடுகளின் சார்பில் பேசிய கியூபா நாட்டின் தூதர் அப லார்டோ மொரேனோ, உலக நாடுகள் ஒன்று சேர்ந்து நிறைவேற்றியுள்ள இந்த தீர்மானத்திற்கு இஸ் ரேல் உடனடியாக தலை வணங்க வேண்டும் என்றும், காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண் டுமென்றும் வலியுறுத்தி னார்.

மேலும், இக்கூட்டத் தில் இந்தியா, இந்தோ னேசியா, வெனிசுலா, எகிப்து, கத்தார், அர்ஜென் டினா, மலேசியா, உகாண்டா, பிரேசில், சிரியா, துருக்கி, ஏமன், வியட்நாம், செக் குடி யரசு, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தூதர் களும் இஸ்ரேலின் அட்டூ ழியத்தை வன்மையாகக் கண்டித்துப் பேசினர்.

சீனத் தூதர் லியோ ஜென் மின் பேசும் போது, பாலஸ்தீன – இஸ்ரேல் பிரச் சனை மிகவும் சிக்கல் நிறைந்தது என்றும், இந்தப் பிரச்சனையை படை பலத் தால் ஒரு போதும் தீர்க்க முடியாது என்றும், இஸ்ரே லின் கொடியத் தாக்குதலை மனித குலத்தால் எந்த விதத் திலும் ஏற்றுக் கொள்ளவே முடியாதது என்றும் கடுமை யாக சாடினார்.

காசாவில் இஸ்ரேலிய குண்டுவீச்சுக்கு அஞ்சி பள் ளிகள் மற்றும் பொது அலு வலகங்களில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். சில தினங்க ளுக்கு முன்பு இப் படி ஐ.நா. சபையின் அலுவலக கட்டி டத்தில் 700-க்கும் மேற் பட்ட பாலஸ்தீன மக்கள் தஞ்சம் புகுந்திருந்தனர்.

இந்தக் கட்டிடத்தை குறி பார்த்து இஸ்ரேலிய போர் விமானங்கள் சரமாரியாக குண்டுவீச்சு நடத்தின. இதில் ஏராளமானோர் பலி யாகினர். காசா நகர மக்க ளுக்கு அளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்கள், மருந்துப் பொருட்கள் உட்பட அனைத் தும் அடியோடு அழிந்தன.

இந்தத் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த ஐ.நா. பொதுச்சபை உடனடியாக சிறப்புக் கூட்டத்திற்கு ஒப் புக் கொண்டு ஏற்பாடு செய் தது என்பது குறிப்பிடத் தக்கது.

Exit mobile version