Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இஸ்ரேலில் சமூக நீதி இயக்கம் அரசிற்கு எதிரான போராட்டம்

ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் ஸ்ரேலின் பலபகுதிகளின் ஒன்றிணைந்து அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். 60 ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொண்ட மிகப்பெரிய பேரணி தெல் அவிவ் இல் நடைபெற்றது. ஜெரூசலம், ஹபிபா, பீர்ஷெவா போன்ற ஏனைய பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. “சமூக நீதி” என்ற தொழிற்சங்களை உள்ளடக்கிய அமைப்பு ஒழுங்கு செய்த இந்தப் போராட்டத்தில் புதிய இளைஞர் அமைப்புக்களும் பங்கேற்றன. பெருளாதாரச் சுமை, வீட்டு விலையேற்றம், இலவசக் கல்வி ஆகிய அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் உலகெங்கும் நடைபெற்றுவரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக இந்தப் போராட்டம் கருதப்படுகிறது.
சமூக நீதி இயக்கம் ஆர்ப்பாட்ட்டம் குறித்த அழைப்பை இரண்டு வாரங்களின் முன்னமே வெளியிட்டிருந்த போது, பிரதமர் பெஞ்சமின் நதானியாகூ பொருட்களின் விலையேற்றம் வாழ்க்கைத் தரத்தைக் குறைத்துள்ளது எனினும் இதனை எதிர்கொள்வது இயலாததாக உள்ளது என்றும் கருத்து வெளியிட்டார். எது எவ்வாறாயினும் இஸ்ரேலில் போராட்டம் தொடர்வது தவிர்க்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. சமூக நீதி இயக்கத்தின் போராட்டம் இஸ்ரேலிய வரலாற்றில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version