இஸ்ரேலிய போர் விமானங்கள் கடந்த வியாழன் வெள்ளி காலப்பகுதிக்குள் சிரியாவில் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என இரண்டு அமரிக்க இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமரிக்க ஆதரவு இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் பல நிலைகளை மீழத் தாக்கி சிரிய அரசு மறுபடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இதனை எதிர்கொள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக இஸ்ரேல் இத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிரிய லெபனான் எல்லையில் சிரிய அரசின் தாக்குதல்களால் அமரிக்க ஆதரவு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பின்னடைவச் சந்தித்துள்ளனர். எல்லைப்பகுதியின் பெரும்பகுதி சிரிய அரசபடைகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இஸ்ரேலிய தாக்குதல் குறித்து பென்டகன் உத்தியோகபூர்வமான கருத்துக்களை தெரிவிக்க மறுத்துவிட்டது. அமரிக்க அரசு தலைமையிலான நாடுகள் உலகை யுத்தகளமாக்க முற்படுகின்றன.