Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இஸ்ரேலியக் இனக்கொலைக்கு அமெரிக்கா உடந்தை: ரிம் அண்டர்சன்

timandersonஐக்கிய நாடுகள் நிறுப்வனத்தின் பாலஸ்தீனிய அகதிகளுக்கான நிவாரணப் பணிகள் முகவர் நிலையம் ( UN Relief and Works Agency for Palestine Refugees (UNRWA) )தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17 அகதிகள் வடக்கு காசா பகுதியிலிருந்து தஞ்சமடைந்துள்ளனர். தமது முகாம்களில் தஞ்சமடைந்துள்ள அகதிகளுக்குப் பாதுகாப்பு வழங்க போதுமான வசதிகள் இல்லை எனட் அந்த அமைப்புத் தெரிவித்தது. இஸ்ரேலிய அரச படைகளின் மிருகத்தனமான தாக்குதலுக்கு உள்ளானவர்களில் 80 வீதமானவர்கள் அப்பாவிப் பொதுமக்கள் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணிதவர்களும், கடுமையான காயங்களுக்கு உள்ளானவர்களும் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகளும் பெண்களும் என தனது அறிக்கையில் அந்த அமைப்புத் தெரிவிக்கின்றது.

இஸ்ரேலிய சோவனிச அரசு காசா பகுதியில் உருவாக்கியுள்ள மனித அவலத்தால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40 பேர்வரையில் உயிரிழந்துள்ளனர். இதுவரை 175 பேர்வரை உயிரிழந்துள்ளனர். 1270 பேர்வரையில் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இஸ்ரேலின் இனக்கொலைத் தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் அனுசரணையுடனேயே இஸ்ரேல் இத்தாக்குதல்களைப் பலஸ்தீனிய மக்கள் மீது மேற்கொள்கிறது என சிட்னி பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ரிம் அண்டர்சன் தெரிவித்துள்ளார்.

மக்கள் இஸ்ரேலிய இனவழிப்பு யுத்ததிற்கு அஞ்சி மரண ஓலத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் போது, இரண்டு பகுதிகளும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசின் துணை நிறுவனம் போன்று செயற்படும் ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்க நலன்களுக்காகப் பிணங்களை எண்ணும் தனது பணியத் திறம்படச் செய்து முடிக்கிறது.

Exit mobile version