இஸ்ரேலிய சோவனிச அரசு காசா பகுதியில் உருவாக்கியுள்ள மனித அவலத்தால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40 பேர்வரையில் உயிரிழந்துள்ளனர். இதுவரை 175 பேர்வரை உயிரிழந்துள்ளனர். 1270 பேர்வரையில் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இஸ்ரேலின் இனக்கொலைத் தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் அனுசரணையுடனேயே இஸ்ரேல் இத்தாக்குதல்களைப் பலஸ்தீனிய மக்கள் மீது மேற்கொள்கிறது என சிட்னி பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ரிம் அண்டர்சன் தெரிவித்துள்ளார்.
மக்கள் இஸ்ரேலிய இனவழிப்பு யுத்ததிற்கு அஞ்சி மரண ஓலத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் போது, இரண்டு பகுதிகளும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசின் துணை நிறுவனம் போன்று செயற்படும் ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்க நலன்களுக்காகப் பிணங்களை எண்ணும் தனது பணியத் திறம்படச் செய்து முடிக்கிறது.