Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்:தமிழர்களுக்கும் அழைப்பு

israeli_genocideசர்வதேச சமூகம் என்று தம்மைத் தாமே எந்தக் கூச்சமும் இன்றி அழைத்துக்கொள்ளும் உலகின் கொலைகார ஏகாதிபத்திய நாடுகள் மௌனம் காக்க, இஸ்ரேல் காசாவில் தனது இனப்படுகொலையைத் தொடர்கின்றது. பலஸ்தீன மக்களின் சுய நிர்ணைய உரிமையை அழித்துத் தனது சோவனிச அதிகாரத்தை மக்களின் இரத்ததின் மீது நிறுவியுள்ள இஸ்ரேலிய அரசின் இனப்படுகொலை வன்னிப்படுகொலைகளுக்கு நிகரானது.

வெளியிடப்பட்ட கணக்குகளின் படி இதுவரைக்கும் 165 பேரை இஸ்ரேலிய இராணுவம் கொன்றுகுவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களுள் 35 பேர் பச்சிழம் குழந்தைகள். 934 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவற்றில் 235 பேர் குழந்தைகள்.
உக்ரேயினில் நாசி நிறவெறி அரசைக் காப்பாற்றுவதற்காக நாளுக்கு ஒரு தடவை பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை நடத்திய ஐக்கிய நாடுகள் நிறுவனம், இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருகிறது.

ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும், உழைக்கும் மக்களுமே சர்வதேச சமூகம் என்பதை வெளிக்காட்ட இன்று – 19.07.2014- நடைபெறும் ஆர்பாட்டத்தில் கலந்துகொள்வோம். டவுனிங் தெருவில் மதியம் 12 மணிக்கு ஒன்று கூடி இஸ்ரேலியத் தூதரகம் வரை ஊர்வலமாகச் செல்லும் இந்த ஆர்ப்பாட்டத்தில் உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் கலந்துகொளுமாறு வேண்டப்படுகின்றனர்.

Exit mobile version