
நாட்டின் முக்கிய பாதுகாப்பு நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது. புதிய இளைஞர் புலி அமைப்பின் தலைவராகக் கருதப்படும் சுரேஸ் குமார் என்பவர் தமிழகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சுரேஸ் குமார், தமிழீழ விடுதலைப் புலிகளின் குண்டுத் தயாரிப்புப் பிரிவில் கடயைமாற்றியுள்ளார் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பயிற்சிகளை வழங்கி அவர்களை இலங்கைக்கு அனுப்பி நாச வேலைகளில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு நாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்களை அழைத்து அவர்களுக்கு வெடிபொருட்கள் தொடர்பில் தமிழகத்தில் வைத்து பயிற்சிகளை வழங்கத் திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
திவய்யின என்ற இலங்கை அரச சார்புப் பத்திரிகை சிங்கள மக்கள் மத்தியில் அச்ச உணர்வைத் தூண்டிவிட்டு இலங்கை அரசால் தமிழ்ப் பேசும்மக்கள் மீது நடத்தப்படும் இனச் சுத்திகரிப்பை நியாயப்படுத்த வழியேற்படுத்திக்கொடுக்கிறது. இதனால் ராஜப்கக்ச அரசிற்கு எதிரான சிங்கள மக்களின் போராட்டங்களை சீர்குலைக்கிறது.
மறுபுறத்தில் சிங்கள மக்கள் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை ஆதரிக்கும் நிலை தோன்றாமல் இருப்பதற்காக சுயநிர்ணய உரிமை குறித்தே பேச மறுக்கும் இனவாதக் குழுக்கள் தன்னார்வ நிறுவனங்களின் ஆதரவோடு கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.