பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னிய ஆதிக்கசாதி வெறிக்குப் பலியான இளவரசனும் அவரது குடும்பமும் இன்று பார்பன ஆதிக்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள அதிகார வர்க்கத்தால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறது.
மறு பிரேதப் பரிசோதனை செய்ய இளவரசனின் தந்தை இளங்கோ கோரினார். அதன்படி மறு பிரேதப் பரிசோதனை தேவையா என்று ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம், 2 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்தது. அந்த மருத்துவர்கள் நேற்று தர்மபுரிக்கு வந்து ஆய்வு நடத்தினர்.
மதியம் 2.30 மணியளவில் இளவரசன் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி வரும் வழக்கறிஞர்கள் தமயந்தி, செங்கொடி ஆகியோர் மருத்துவமனைக்குள் நுழைய முயன்றனர். இதற்கு பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி நடராஜன் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினார். அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், இளவரசனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 15 பேர் திரண்டு வந்தனர். அவர்கள், தர்மபுரி அரசு மருத்துவமனை நுழைவாயில் அருகே சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக இளவரசனின் குடும்பத்தினரையும் வழக்கறிஞர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது போலிஸ் நிர்வாகம். கொலைக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமான ப.ம.க. நிறுவனர் ராமதாசும் அவரது கையாட்களும் சுதந்திரமாக உலாவருகின்றனர்.
வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட இளவரசன் உறவினர்கள் 15 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சேலம் நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.