லைக்கா குழுமம் என்ற தமிழர் ஒருவரால் நடத்தப்படும் நிறுவனம் உட்பட ரோரிக் கட்சிக்கு நிதி வழங்கும் பெரு நிறுவனங்களோடு, அவற்றின் நலனுகாக மட்டும் இலங்கை செல்லும் பிரதமர் டேவிட் கமரனுக்கு முன்னதாக பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் இலங்கை. சென்றடைந்தார். சார்ள்ஸ் இலங்கையின் இலவசக் கல்வியைக் குண்டுவைத்துத் தகர்க்கும் சமூகவிரோதச் செயலில் ஈடுபடவிருக்கிறார். கொழும்பின் மீரிகமவில் 120 ஏக்கர் காணியில் பிரித்தானியாவின் லங்ஷையர் பல்கலைக்கழகத்தின் வாளகமொன்று அமையவுள்ளது.இப் பல்கலைக் கழகம் 75 மில்லியன் பவுண்ஸ் செலவில் உருவாக்கப்படவுள்ளது. அதற்கான அடிக்கல்லை பொதுநலவாய மாநாடுகளில் கலந்து கொள்ள வரும் இங்கிலாந்தின் இளவரசர் சாள்ஸ் நாட்டி வைக்கிறார். ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் அவசர அவசரமாக இலங்கையில் முதலாவது தனியார் பல்லைக்கழக வளாகத்தை அமைக்க அனுமதியளித்த வர்த்தமானி அறிவித்தலை இலங்கை அரசு வெளியிட்டது.
இலங்கையில் நடைமுறையிலுள்ள முழுமையான இலவசக் கல்வித்திட்டம் தெற்காசியாவின் கல்வியறிவு பெற்ற நாடாக இலங்கையை மாற்றியிருந்தது. வசதியற்ற ஏழைகளின் குழந்தைகள் கூடப் பல்கலைக் கழகக் கல்வியை கற்றுப் பட்டதாரியாக வாய்ப்பை வழங்கிய மூன்றாமுலக நாடுகளில் இலங்கை முதலிடத்தை வகிக்கிறது. இலங்கையில் ஆட்சிக்கு வந்த எந்தக் கட்சியும் இலவசக் கல்வியில் கைவைக்கத் துணிந்ததில்லை.
மேற்கு நாடுகளினதும் இந்தியவினதும் அடிமை போன்று செயற்படும் பாசிச ராஜபக்ச அரசு கல்வியைத் தனியார் மயப்படுத்துவதைச் சட்டமாக்கியது. தமது எஜமான விசுவாசத்தைக் காட்டிய ராஜபக்ச அரசு பிரித்தானியப் பல்கலைக் கழகத்திற்கு தனது முதல் அனுமதியை வழங்கியது. ‘தமிழ்த் தேசியத்தின் பெயரல்’ தமிழ் நாட்டின் ‘எஸ்.ஆர்.எம்’ குழுமம் இலங்கையில் பல்கலைக் கழகம் திறப்பதற்கு விண்ணப்பித்துள்ளது.
தேசியம் என்பது அன்னிய நாடுகளுக்குக் காட்டிக்கொடுப்பது என்று எண்ணிகொண்டிருக்கும் பிழைப்புவாத ‘தமிழ்த் தேசியவாதிகள்’ இளவரசர் பல்கலைக் கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவதைத் தெரிந்துகொண்டால் பாறாங்கல்லையே நட்டுவைப்பார்கள்.