Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலவசக் கல்வியைக் காப்பாற்றுவதே எமது நோக்கம் : யாழ் பல்கலைகழக ஆசிரியர்கள்

பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டம் குறித்து நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் யாழ் பல்கலைகழக ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:
இலவச கல்வி முறை இந்த நாட்டில் இல்லாமல் செய்யப்படும். அதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது. இதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர் ஊதியத்தை அரசு கவனத்தில் கொள்ளாதது இதன் ஒரு பகுதியே.அரசாங்கம் இலங்கைக்குள் தகுதி, தராதரம் பாராமல் தனியார் பல்கலைக்கழகங்களை தொடர்ந்தும் உள்நுழைய அனுமதித்துக் கொண்டிருக்கின்றது. இன்று பல்கலைக்கழக கல்வி ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிப்பகிஸ்கரிப்பு சம்பள அதிகரிப்பிற்கானது என கதைகட்ட முயற்சிக்கப்படுகின்றது.ஆனால் அது உன்மையல்ல, எமது போராட்டத்தின் நோக்கங்களில் ஒரு பாகம் மட்டுமே சம்பள அதிகரிப்பாகும்.
இதனை எமது பெற்றோர் புரிந்து கொள்ளவேண்டும், மேலும் எமது போராட்டங்களால் இழக்கப்படும் மாணவர்களின் கல்வி மீள ஈடுசெய்யப்படும்.
இந்நிலையில் எமது போராட்டம் முற்றுமுழுதாக இலங்கையில் இலவச கல்விமுறையினை காப்பாற்றுவதற்கேயாகும்.
இதேவேளை பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு ஒதுக்கும் நிதியினளவும் வெகுவாக குறைக்கப்பட்டிருக்கின்றது.
எனவே எமது போராட்டம் கல்வியறிவுள்ள எதிர்கால சந்ததி உருவாகவேண்டும் என்பதற்கானது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

Exit mobile version