Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலபத்தில் இயங்கும் இன்சூரன்ஸ் துறை அன்னிய மூலதனத்திற்கு விற்பனை : மன்மோகன்

இந்திய இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட் டுக்கான வரம்பை 26 சதவீ தத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்துவது என்று மத்திய அமைச்சரவை முடிவு செய் துள்ளது.

இன்சூரன்ஸ் துறையை காவுகொடுக்கும் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நாடு முழுவ தும் இன்சூரன்ஸ் ஊழியர் கள் வெள்ளியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெள்ளியன்று காலை செய்தியாளர்க ளிடம் பேசுகையில் இன்சூ ரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டுக்கான வரம்பை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்த வகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பு தல் அளித்துள்ளது என்று தெரிவித்தார். எல்ஐசியின் பங்கு மூலதனம் ரூ.5 கோடி யிலிருந்து ரூ.100 கோடியாக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

எல்ஐசி திருத்த மசோதா 2008க்கு மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. அமைச்சர்கள் குழு அளித்த பரிந்துறையின் அடிப்படையில் இதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார். 

ஐஆர்டிஏ சட்டப்படி இன்சூரன்ஸ் கம்பெனிகள் குறைந்தபட்ச பங்கு மூல தனம் ரூ.100 கோடி வைத் திருக்க வேண்டும். ஆனால் இதிலிருந்து எல்ஐசிக்கு விலக்கு அளிக்கப்பட் டிருந்தது. அதேபோன்று எல்ஐசி பாலிசிகளுக்கு அரசு உத்தரவாதம் அளிக் கப்பட்டுள்ளது.

தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் எதிர்ப்பு தெரி வித்ததன் காரணமாக எல்ஐ சியின் பங்கு மூலதனமும் ரூ.100கோடியாக உயர்த்தப் படுகிறது என்று தகவல் கள் தெரிவிக்கின்றன. அதே போன்று எல்ஐசி பாலிசிக ளுக்கு அரசு உத்தரவாதம் அளிக்கக்கூடாது என்றும் தனியார் இன்சூரன்ஸ் கம் பெனிகள் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றன.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் அக்டோபர் 24ந் தேதி ஒத்தி வைக்கப் பட்டது. டிசம்பர் 10ம்தேதி மீண்டும் கூடுமென அறி விக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்திலேயே இன்சூ ரன்ஸ் துறையை அந்நிய ருக்கு திறந்துவிடும் மசோ தாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட் டுள்ளது.

உலகமய பொருளாதார கொள்கையை கண்மூடித் தனமாக பின்பற்றியதால் அமெரிக்கப் பொருளாதா ரம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இது உலகளா விய பொருளாதார நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இன்சூரன்ஸ் வங்கித்துறைகள் பெரும் பாலும் பொதுத்துறையின் கீழ் இருந்ததால் இந்த நெருக் கடி இந்தியாவை பெரு மளவு பாதிக்கவில்லை. இந்த சிக்கலான நேரத்தில் மன்மோகன் சிங் அரசு எடுத்துள்ள விபரீத முடி வால் இந்திய இன்சூரன்ஸ் துறை கடும் பாதிப்பை சந் திக்க வேண்டிய நிலை ஏற் படுத்தப்பட்டுள்ளது. 

அரசின் இந்த விபரீத முடிவை எதிர்த்து நாடு முழு வதும் எல்ஐசி மற்றும் பொதுத்துறை இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இம் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்படும் நாளன்று நாடு தழுவிய ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வும் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கங்கள் முடிவு செய் துள்ளன. 

அரசின் இந்த முடிவுக்கு முதலாளிகள் சங்கமும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளன.


Exit mobile version