Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை விமான நிலையத்தில் அரச கெடுபிடு!

தப்பிச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்ய விசேட பிரிவொன்று விமான நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
 
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட புலனாய்வுப் பிரிவொன்று 24 மணி நேரமும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த சுமார் 20 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தப்பிச் செல்ல முற்பட்டவர்களில் ஒருவர் ஊடகவியலாளர் என்ற போர்வையில் நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்துள்ளதாக சிரேஸ்ட காவற்துறை அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சர்வதேச புலனாய்வுப் பிரிவுகளுடன் கூட்டிணைந்து நாட்டிற்குள் பிரவேசிக்கும் பயங்கரவாதிகள் மற்றும் நாட்டைவிட்டு வெளியேறும் பயங்கரவாதிகளையும் கைது செய்ய தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version