இலங்கை, வாழைச்சேனையைச் சேர்ந்த பிரபல கவிஞரான ஏ.ஜி.எம் ஸதக்கா நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் காலமானார். ஒரு ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவர் இலங்கையிலிருந்து வெளிவரும் ‘யாத்ரா’ கவிதைகளுக்கான தொகுப்பினதும் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கவிதைகளைத் தொகுத்து வெளிவந்த ‘மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்’ எனும் கவிதைத் தொகுப்பினதும் ஆசிரியர் குழுவிலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. நேற்று இடம்பெற்ற இராணுவப்படையின் வாகன அணிவகுப்புக்கு இடமளிக்க முற்பட்டபோதே இந்த விபத்து நேர்ந்திருக்கிறது. அவர் மரணத்தைப் பற்றி முன்னர் எழுதிய கவிதையொன்று இணைக்கப்பட்டுள்ளது.