Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை யுத்தம் இந்திய நிறுவனங்களால் நடத்தப்பட்டது : அருந்ததி ராய்

இலங்கைப் யுத்தம் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக நடத்திய யுத்தம் மட்டுமல்ல பெரும் வணிக நிறுவனங்கள் நடத்திய யுத்தமாகும் என பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் சென்னையில் தெரிவித்தார். இந்திய பெரு நிறுவனங்கள் இலங்கை நோக்கி மேலதிக பணம் திரட்டுவதற்காகப் படையெடுக்கின்றன. தமிழ் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் மட்டும் தான் இந்த யுத்ததை நிறுதியிருக்க முடியும் ஆனால் அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள். இதே தான் இன்று மத்திய இந்தியாவிலும் நடைபெறுகிறது. பழங்குடி மக்கள் பெரும் வணிக நிறுவனங்களால் சூறையாடப்படுகின்றனர்.
இந்திய அரசால் பழங்குடி மக்கள் மீது நிகழ்த்தப்படும் இனப்ப்படுகொலை என்ற தலைப்பில் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் அருந்ததி ராய் உரையாற்றுகையிலேயே மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.
மக்களின் போராட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானதல்ல ஆனால் ஜனநாயகம் இயங்கும் பொறிமுறைக்கு எதிரான பொராட்டம்.

காந்திய வாதியாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடியும் ஆனால் உண்ணபதற்கு உணவே இல்லாமல் எப்படி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடியும் என அவர் கேள்வியெழுப்பினார்.

Exit mobile version