இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தை சென்னையில் தொடங்கியது. சென்னை தேனாம்பேட்டை டீஎம்எஸ் வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கபடுவதை அடுத்தும் இலங்கை மீன்பிடி வளங்கள் தமிழகத்தின் இயந்திர மீன்பிடிவகைகளால் அழிக்கப்படுவது குறித்தும் இலங்கை மற்றும் இந்திய மீனவர்களோடு பேச்சுவார்ததை நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் இலங்கை சார்பாக 10 மீனவர்களும் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். தமிழகம் சார்பாக 12 மீனவர்களும், 13 அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். இதில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் பார்வையாளராக கலந்து கொள்கிறார்.
இந்தியா வந்த இலங்கை மீனவர் பிரதிநிதி அந்தோணிமுத்து ‘‘இரு நாட்டு மீனவர்கள் சந்தித்து நடத்தும் பேச்சுவார்தையில் நிரந்தர தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக’’ தெரிவித்தார்.