இதற்கான உண்மையான காரணம் வேண்டுமென்றே இவ்வாறு தமிழ் கொலை செய்யப்படுவதில்லை. மாறாக, தட்டச்சுசெய்துவிட்டு தமிழ் அறிந்தவர்களிடம் காண்பித்து சரவை பார்க்கப்படாமையே இதற்குக் காரணம்.
மாத்தளையில் உள்ள இலங்கை மின்சார சபையினால் வழங்கப்பட்ட படிவமொன்றையே மேலே காண்கிறீர்கள். சில வரிகளில் எழுத்துப் பிழைகள் உள்ளன. பொறுக்கலாம். என்றாலும் கடைசியில் சிவப்பு நிறத்தில் வட்டமிட்டுக் காட்டப்பட்டிருப்பது “சேவை” என்பது “வேசை”யாகியிருப்பது.