தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்த இலங்கை மக்களுக்கு எதிரான தாக்குதல் குறித்து தனது CPI(m) கவலையை வெளிப்படுத்துகிறது. தமிழ் மக்கள் குறித்து இலங்கை அரசின் அணுகுமுறை எதுவானாலும் மக்களுக்கும் மக்களுக்கும் இடையேயான உறவுகளை சீர்குலைக்ககக் கூடாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான உறவுகள் பலப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். தமிழ் நாட்டு அரச தலையீட்டின் அடிப்படையில் இரண்டு பாடசாலை மாணவர்களின் கால்பந்தாட்ட அணிகள் திருப்பி அனுப்பப்பட்டமை துரர்ஷ்டவசமானது எனவும் அவர்களின் அறிக்கை குறிப்பிடுகிறது.
தமிழ் நாட்டு மக்களும் அரசியல் சக்திகளும் இலங்கை மக்களுடனான இசைவிணக்கமான நற்புரீதியான உறவைப் பேணுவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மேலும் கூறும் அறிக்கையில் யாத்திரிகள் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.