Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை போர்நிறுத்த ஒப்பந்த ஆவணங்கள் மாயம்

2002-ம் ஆண்டு இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஆகியோர் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் மாயமானது தெரியவந்துள்ளது. இந்த ஆவணங்கள் அமைதிக்கான செயலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சக அலுவலகம் ஆகிய இடங்களில் இல்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் நகல் அரசு தகவல் மையத்திற்கும் அனுப்பி வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஒப்பந்தம் தொடர்பான முழுத் தகவல்களையும் வெளியிடப்போவதாக அமைச்சரும், புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியுமான கருணா கூறியுள்ளார் என்றும் இணையதள செய்திகளில் கூறப்பட்டுள்ளன.

Exit mobile version