போர் முடிந்து ஒரு வருடம் கழிந்து விட்ட நிலையிலும் ஈழத் தமிழர் தொடர்பான இந்தியாவின் நாடகங்கள் முடிந்த பாடில்லை. ஆறு மாதங்களுக்குள் முகாம்களில் உள்ள மக்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை இந்தியாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை இப்போது இந்தியாவிடம் கேட்டால் மக்களை மீள் குடியேற்றம் செய்யாமல் இருக்க இதுதான் காரணம் என்று இலங்கை என்ன சொல்கிறதோ அதைத்தான் இந்தியாவும் சொல்லும். இலங்கை என்னும் இனகொலை அரசை பாதுகாத்து வழி நடத்தி வருவதும் இந்தியாதான் என்கிற நிலையில் இந்தியாவின் இலங்கை ஆதரவு நிலைப்பாடுகளைத் தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நாடகம் ஆடி வருகிறார் தமிழக முதல்வர் கருணாநிதி. தான் இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த உடன் போர் நின்றூ விட்டதாக உளறிய கருணாநிதி. தனது எம்பிக்கள் குழு இலங்கை சென்று வந்ததும் மக்கள் விடுவிக்கப்பட்டு விட்டதாக ஒரு தோற்றத்தை உருவாக்கினார். இந்நிலையில் இலங்கைக்கு சிறப்புத் தூதரை அனுப்புவது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் சென்னை வந்து கருணாநிதியைச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.