Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை தொடர்பாக இந்தியா ஒரு மாற்று சிந்தனைக்கு வரும் : சுரேஷ் காத்திருப்பு

இலங்கை அரசாங்கம், இந்தியப் பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்பட பல தலைவர்களிடம், இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அளித்த உறுதிமொழிகளை காப்பாற்றவில்லை என்பதை இந்தியா புரிந்து கொண்டுள்ளது. அதனால், இலங்கை மீது ஓர் அதிருப்தி ஆரம்பமாகியிருப்பதைக் காண முடிகிறது.
இலங்கை அரசாங்கத்தை எந்த அளவிற்கு நம்புவது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, இலங்கை தொடர்பாக இந்தியா ஒரு மாற்று சிந்தனைக்கு வரும் காலம் விரைவில் வரும்’’ என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
ஒவ்வோரு தடவையும் இந்தியா மாற்றுசிந்தனைக்கு வரும்போதெல்லாம் இலங்கையில் பிணங்கள் விழுவதிலிருந்தே ஆரம்பிக்கும். ஆக, இலங்கைப் பிரச்சனையிலிருந்து இந்தியாவும் மேற்கும் ஒதுங்கிக்கொண்டாலே அழிவுகளில் பெரும்பகுதி நிறுத்தப்படும்.

Exit mobile version