மகிந்த பிரித்தானியா சென்று திரும்பிய பின் கடந்த புதனன்று இரவு அமைச்சரவையில் இந்த முன்மொழிவை முன்வைத்தார். விமல் வீரவன்ச இந்த முடிவை ஆதரிக்க, மிக நீண்ட விவாதத்தின் பின்னர் இம் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதால் வடக்ல்லில் சிரிமாவோ பண்டாரநாயக்க ஒரு நிகழ்வை விட்டு வெளியேறினார் என்று மகிந்த சுட்டிக்காட்டினார்.
ஒரு நாட்டின் அனைத்து அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் அதிபர் வெளிப்படையாகவே இனவாதத்தைப் பேசுகின்ற நிகழ்வு இலங்கை போன்ற நாடுகளில் இன்னமும் நடைமுறையில் இருந்து வருகிறது.
சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த சிங்கள மயமாக்கல், திட்டமிட்ட இனப்படுகொலை ஆகிய இலங்கை அரசின் நிகழ்சி நிரலின் மிகப்பிரதான சோவனிசச் சிந்தனையாக இது கருதப்படுகிறது.
இவ்வாறான வெளிப்படையான பேரினவாத முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் அரச் துணைக் குழுக்கள் போன்ற யாருமே இதுவரையில் எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.