Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை துறைமுக அதிகார சபையின் இணையம் ஹக் செய்யப்பட்டது

srilankan-ports-hackedஇலங்கை துறைமுக அதிகார சபையின் (Sri Lanka Ports Authority (SLPA)) இணையமும் உள்ளீட்டாளர்களின் (Hackers) தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. டேவிட் ஜோன்ஸ் என்ற தனிநபர் ஒருவரே இத் தாக்குதலை உரிமை கோரியுள்ளார். இந்தச் செய்தி பதியப்படும் நேரம் வரைகும் துறைமுக அதிகார சபையின் இணையம் (slpa.lk) மீளமைக்கப்படாமல் இயங்கா நிலையிலேயே காணப்படுகின்றது. தாக்குதலை நடத்தியவர்கள் slpa.lk/admin/upload/deface3.html என்ற பக்கத்தில் பின்வரும் செய்தியைப் பதிவு செய்திருந்தார்.

‘You have been hacked by Davy Jones, We are always here to give boots to Asses!!’

முன்பதாக இலங்கை அரசின் ஊடக தேசியப் பாதுகாப்பிற் (MCNS) ஊடக மையம் தாக்குதலுக்கு உள்ளாயிருந்தது தெரிந்ததே. இதன் போது புலம் பெயர் தமிழர்கள், தமிழ் நாடு அரசாங்கதில் வேலைபார்க்கும் ஊழியர் உட்பட பலரின் பெயர்கள் வெளியாகியிருந்தன.

Exit mobile version