இதன் போது, குழுவின் தலைவரான சுஸ்மா சுவராஜ், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தபோது, 13ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல் தீர்வு ஒன்றை காண்பதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், அதற்கு அவர் இணக்கம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
இதன்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வாக்குறுதி கொடுத்த போதும், அமைச்சர்கள் அவ்வாறான வாக்குறுதி ஏதும் கொடுக்கப்படவில்லை என்று மறுத்து விட்டதை ஊடகவியலாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.
அதற்கு சுஸ்மா சுவராஜ், அமைச்சர்கள் என்ன கூறினர், எதை மறுத்தனர் என்ற கேள்வியே இல்லை. ஜனாதிபதி மகிந்த 13ஆவது திருத்தம் மற்றும் அதற்கு அப்பாற்பட்ட இரண்டையும் நடைமுறைப்படுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.
இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் பந்துல ஜெயசேகரவும் கலந்து கொண்டிருந்தார். அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது, கருத்து எதையும் கூற மறுத்து விட்டார்.
கடந்த ஜனவரி மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, ஜனாதிபதி மகிந்தவைச் சந்தித்த பின்னர், 13ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய அதிகார நலன்களுக்காக இலங்கைக்குப் பயணம் செய்த குழுவினருக்கு இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்கள் நலன்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.