தமது நாளாந்த வருமானமே பல கோடி இலங்கை ரூபாய்களாகும் நிலையில் இந்திய நடிக, நடிகைகள் எவரும் இலவசமாக இங்கு வரப் போவதில்லை. இந்தியப் பிரதமர் மோடியின் பிரச்சாரக் கூட்டங்களில் நடிகர்கள் ஈடுபடுத்தப்பட்டதைப் போன்று இந் நடிகர்களும் இலங்கையில் செலவளிக்கப் போகும் காலத்தின் பெறுமதி இப்பொழுதே கோடிக் கணக்கில் கைமாறியிருக்கும்.
இலங்கையில் காலநிலை மாற்றத்தால் இந்த மாதம் முழுவதும் அடைமழையினாலும், வெள்ளப் பெருக்கினாலும், மண் சரிவுகளாலும் பலர் மரணமடைந்தும், இலட்சக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்துமுள்ள இந் நிலையில், அம் மக்களின் நலன் குறித்தோ, நிவாரணம் குறித்தோ சிறிதும் சிந்திக்காது, இவ்வாறான நடிகர்களுக்கென கோடிக்கணக்கில் மக்களின் பணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செலவழிப்பது குறித்து என்னவென்பது?
– எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com