இலங்கையின் மற்றுமொரு சோவனிசப் பேரினவாதக் கட்சியான
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஜெனரல் சரத் பொன்சேக்காவை பொது வேட்பாளராக நிறுத்தவும், அவரது வெற்றிக்காக உச்சபட்ச அர்ப்பணிப்புக்களையும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
சரத் பொன்சேக்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜொன்ஸ்டன், இந்திக்க, அசாத் சாலி ஆகியோர் இன்றைய தமது தீர்மானத்தை அறிவிக்க முன்னர் நேற்றிரவு (25) ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பீ.திஸாநாயக்கவைச் சந்தித்துள்ளனர். திஸாநாயக்கவின் இல்லத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் செனவிரத்ன, ஜயலத் ஜயவர்தன, ரவீந்திர சமரவீர, தலதா அத்துகோரள ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
இங்கு கருத்து தெரிவித்துள்ள எஸ்.பீ.திஸாநாயக்க, ஜெனரல் சரத் பொன்சேக்காவை ஆதரித்து ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கூறியுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில் எவரும் கட்சியைவிட்டு விலகிச் செல்லக் கூடாது எனவும் எஸ்.பீ.கூறியுள்ளார்.