Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தலில் இதுவரை எதிர்பார்த்த வன்முறைகள் இல்லை

வாக்களிக்கும் மைத்திரி
வாக்களிக்கும் மைத்திரி

இலங்கையில் ஜனாதிபதியாவதற்குப் போட்டியிடும் இரண்டு பேரினவாதிகளும் வாக்களித்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஸ வீரகெடிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஸ வித்தியாலத்திலும், எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை புதியநகர் வித்தியாலோக விஹாரையிலும் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். மைத்திரிபாலவின் தேர்தல் பிரச்சாரத்தில் வதந்தி பிரதான பாத்திரம் வகித்தது. வதந்திகள் பரப்பட்டது போன்று வன்முறைகள் பெரிய அளவில் நடைபெறவில்லை எனத் தெரியவருகிறது. வடக்கிலும் கிழக்கிலு கடந்த தேர்தலிலும் அதிகமான வாக்குகள் பதியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைபுக் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே வடக்கில் மக்கள் வாக்களித்துள்ளதாக மாவை சேனாதிராசா தேர்தல் குண்டு ஒன்றை வெடித்துள்ளார். யாழ். பருத்தித்துறை நாவலடி ஸ்ரீலங்கா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு 800 மீற்றருக்கு அப்பால் கைக்குண்டு வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர்.

Exit mobile version