சுஷ்மா சுவராஜ் தலைமையில் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு 6 நாள் பயணமாக நேற்று 16-04-2012- மாலை தில்லியிலிருந்து இலங்கை புறப்பட்டு சென்றது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். போரை பயன்படுத்தி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தமிழர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டன.தமிழர்களின் மறுவாழ்வு பணிகளைப் பார்வையிட பெயரில் இந்தியாவில் இருந்து அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவை மத்திய அரசு இலங்கைக்கு அனுப்பியது.
இக்குழுவில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 14 எம்.பி.க்கள் முதலில் இடம் பெற்றனர். இவர்களில் 7 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இந்திய வாக்குக் கட்சி அரசியல் வாதிகள் மத்தியில் 80 களைப் போன்று இலங்கை குறித்து பல காய்நகர்த்தல்கள் இடம் பெற்றாலும், இந்திய பிராந்திய மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கான குழுவாகவே இதனைக் கருதலாம்.