இல்லாவிடின் அவர்களை ஓட ஓடத் துரத்துவோம் என எச்சரித்த தேரர் முஸ்லிம் குழுக்கள் தங்கள் செயற்பாடுகளை முஸ்லிம் நாடுகளுக்குச் சென்று மேற்கொள்ள வேண்டும் எனவும் பெளத்த நாட்டில் இதற்கு இடமில்லை என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் இன்னொரு அழிவைத் திட்டமிடும் இந்த நச்சுக் கிருமிகள் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழும் அரசுக்கு எதிரான போராட்டங்களைத் திசைதிருப்புவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்து அடிப்படைவாத பாசிசத்தை சிறுகச் சிறுக ‘தமிழ்த் தேசியம்’ என்ற பெயரில் திணிக்கும் புதிய வரவுகள் பொதுபல சேனாவைக் கண்டிப்பதில்லை. இவர்களுக்கும் பொதுபல சேனாவிற்கும் எழுதப்படாத உடன்படிக்கை உள்ளது போல் செயற்பாடுகள் வெளித்தெரிகின்றன. மத அடிப்படையிலான இரத்தக் களரியை இலங்கையில் ஏற்படுத்தும் புதிய திட்டங்கள் இவையா என்ற சந்தேகங்கள் பரவலாக எழுப்பப்படுகிறது.