Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை சர்வாதிகாரி மகிந்தவிற்கு எதிராக லண்டன் விமான நிலையத்தில் இன்று அவசர ஆர்ப்பாட்டம்!

இன்று(29.11.2010) இரவு மணிக்கு இலங்கைச் சர்வாதிகாரியும் போர்க்குற்றவாளியுமான மகிந்த லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். இவரின் வருகைக்கு எதிராக அவசர ஆர்ப்பாட்டம் ஒன்றை பிரித்தானியத் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஹீத்ரோ விமானநிலையத்தின் நான்காவது இறங்கு தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானியா வாழ் தமிழ்ப் பேசும் மக்களும், மனிதாபிமானிகளும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் பங்காற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இப் போராட்டத்துக்கான அழைப்பை அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஒன்றாக விடுத்துள்ளன.

Exit mobile version